சாலையில் ஆறாக ஓடிய 20,000 லிட்டர் டீசல்.. போட்டி போட்டு வாளியில் பிடித்த மக்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் தோன்பத்ரா அருகே சாலையில் ஆறாக ஓடிய டீசலை, பொதுமக்கள் போட்டிபோட்டு பிடித்து சென்றனர். மார்க்குண்டி பகுதியில் டீசல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த டேங்கரில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், எண்ணெய் கேன், வாளியில் டீசலை பிடித்து தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த டேங்கர் லாரியின் உதவியாளர், மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.