ரயிலில் கிடைத்த ரூ.1.80 கோடி.. தோண்ட தோண்ட கட்டு கட்டாக கிடைத்த பணம்

Update: 2025-07-23 05:59 GMT

உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சபர்மதி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சவுத்ரி என்பவரிடம் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. அவர்

ஜான்சியில் இருந்து சாப்ரா வரை பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தாலும், எந்த விதமான ஆவணங்களையும் வழங்க முடியவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வருமான வரி துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்