கரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்து 26 டிப்பர் லாரிகள், 3 கார் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி சரக டி.ஐ.ஜி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், காவிரி, அமராவதி ஆற்று பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் அருகே மண்மங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான, மணல் சலிப்பகத்தில், காவிரி ஆற்று மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டு, லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு லேப்டாப், 100 யூனிட் மணல் மற்றும் 2 லட்சத்து 26 ஆயிரத்து 900 ரூபாய் பணம் உள்ளிட்டவை திருச்சி தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.