காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-07 00:52 GMT

பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது..

இது இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் என ​பிரகாஷ் காரத் பேச்சு..

கச்சத்தீவு பிரச்சனையை ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமன் கிளப்புவது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்? என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி..

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக தான்.

பொன்விளையும் பூமியை தாரை வார்த்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வன்கொடுமை போன்றவற்றை பாஜக ஊக்கப்படுத்தியதாக சோனியாகாந்தி விமர்சனம்.

நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாகவும் பேச்சு.

இந்தியா கூட்டணி என்றால் கமிஷன் என்று பொருள்படும் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

முஸ்லீக் லீக் கட்சியின் சிந்தனைகளைத்தான் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பிரதிபலிப்பதாகவும் சாடல்.... 

Tags:    

மேலும் செய்திகள்