பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவமனைக்கு சீல் - மருத்துவர் கைது
எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையின் பாலினம் கண்டறியும் செயலில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூறி வந்ததால் சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். பாலினம் கண்டறியும் கருவியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவர் கண்ணன், உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகிய மூவர் மீது எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.