மே 14ம் தேதி ஆர்.கே.செல்வமணி சூட்டிங்கை நிறுத்தட்டும், ஆனால் தாங்கள் நடத்தி காட்டுவோம் என்று நடிகரும், தயாரிப்பாளருமான எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்.வி.சேகர், ஆர்.கே.செல்வமணியால் நியாயப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தங்கள் மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஆர்கே செல்வமணி பெப்சி அமைப்பின் தலைவர் ஆனதே தவறு என்றும் கூறினார்.