ரஜினியை பார்த்து வார்த்தையை விட்ட ராம்கோபால் வர்மா - ரத்தம் கொதிக்கும் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் தனக்கு தெரியவில்லை என்றும், அவரால் ஸ்லோ மோஷன்(slow motion) இல்லாமல் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை என்றும் கூறினார். எதுவுமே செய்யாமல் பாதி படம் வரை ரஜினிகாந்த் ஸ்லோ மோஷனில் நடப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றும், அவரால் ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்றும் கூறினார். இந்த பேட்டியை பார்த்து, ரஜினிகாந்தின் ரசிகர்கள், இயக்குனர் ராம் கோபால் வர்மாவை இணையத்தில் திட்டி வருகிறார்கள்.