நாகர்கோவில் திரையரங்கில், 'குட் பேட் அக்லி' திரைப்பட இடைவேளையில் ரசிகர்கள் மேளதாளத்துடன் திரையரங்கினுக்குள் செல்ல முயன்றதால், திரையரங்கு உரிமையாளர் தடுத்து நிறுத்தியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு மேளதாளங்களை தவிர்த்து, ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். 'குட் பேட் அக்லி' படம் வெளியான முதல் நாளில் அஜித் ரசிகர்கள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர்.