போனில் அடிக்கடி தலைவலியாக வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி? இனி கவலை வேண்டாம்
போனில் அடிக்கடி தலைவலியாக வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி? இனி கவலை வேண்டாம்
இன்றைய டிஜிட்டல் உலத்துல Mobile Phone நம்மளோட அடிப்படைத் தேவைகள்ல ஒன்றாவே மாறியிருக்கு. அதே நேரத்தில், தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் SMS-கள் ,பலருக்கும் கடும் தொந்தரவாவே இருக்கு. பெரும்பாலான நேரங்கள்ல, நம்ம number-அ எங்கையோ இருந்து எடுத்து நமக்கு call,sms-லா வரும். இதனால தினசரி வாழ்க்கைல பல தொல்லைகள் ஏற்படும் ,குறிப்பா office-ல வேலைல இருக்கப்போ ,இல்ல வீட்டுல rest-ல இருக்கப்போ இந்த அழைப்புகள் வந்தா ரொம்பவே tension ஆகும் .சில நேரங்கள்ல, இவை மோசடிகளுக்கும் வழிவகுக்குது.
இந்தநிலைலதா இது போன்ற தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் SMS-களால் ஏற்படும் தொந்தரவ முடிவுக்கு கொண்டு வர, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI ஒரு புதிய டிஜிட்டல் ஒப்புதல் திட்டத்த அறிமுகப்படுத்தியிருக்கு.
பாதுகாப்பற்ற offline ஒப்புதல்கள தவிர்த்து, safe-ஆன டிஜிட்டல் கட்டமைப்ப கொண்டு வருவருவதுதா, இந்த திட்டதோட நோக்கமா இருக்கு. spam, மோசடி மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் தவறான பயன்பாட்ட எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள ஒழுங்குமுறை அமைப்புகளின் கூட்டுக்குழு தீவிரப்படுத்தியிருப்பதா TRAI தெரிவித்திருக்கு.
இந்த பைலட் திட்டம்,இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்து, SBI, PNB, ICICI, HDFC, Axis Bank, Canara Bank மற்றும் Kotak Mahindra Bank போன்ற முக்கிய வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுது.
இந்த திட்டத்தோட செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள கண்காணிக்க நான்கு சிறப்பு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுருக்கு. மேலும் இந்த திட்டத்தின்படி ,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுப்பும் சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகள் "1600" என்ற பிரத்யேக எண்ணின் அடிப்படையில ஒருங்கிணைக்கப்படும்னு அறிவிக்கப்பட்டுருக்கு. நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறனைப் பொருத்து, இந்த மாற்றம் படி படியா அமல்படுத்தப்படும். இது TRAI-க்கு வழங்கப்படும் துறைசார் ஒழுங்குமுறை அமைப்புகளின் உள்ளீடுகளின் அடிப்படையில அமையும்னு சொல்லப்பட்டுருக்கு..
இந்த திட்டத்தில TRAI-யோட RBI, SEBI, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் ஆகிய முக்கிய அமைப்புகள் பங்கேற்றுருக்கு. குறிப்பா, சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் DLT தளங்கள், TRAI SMS ஹெடர் போர்ட்டல் மற்றும் இந்திய சைபர் கிரைம் ஆகியவற்றை இணைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்னு தெரிவிக்கப்பட்டது.
மேலும் SIP மற்றும் PRI கோடுகளின் தவறான பயன்பாடு மூலமா அதிக அளவிலான spam calls வருவத TRAI கவனிச்சுருக்கு. அதுனால இந்தமாரியான தொலைத்தொடர்பு சேவைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள், எண் ஒதுக்கீட்டு வரம்புகள் போன்றவைலா விரைவில் அமலுக்குவரலாம்.
அதுமட்டுமில்லாம வணிகச் செய்திகள அனுப்பும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள பெற ,வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில, TRAI தனது SMS ஹெடர் போர்ட்டல மாற்றி அமச்சுருக்குனும் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவிச்சுருக்கு. இந்த முன்முயற்சிகள் மூலமா, தேவையற்ற அழைப்புகள் மற்றும் SMS-களோட தொல்லை குறைந்து, இந்தியாவோட டிஜிட்டல் தகவல் தொடர்பு சூழல், மேலும் பாதுகாப்பானதாகவு, நம்பகமானதாகவு மாறும்னு எதிர்பார்க்கப்படுது..
இந்த திட்டம் , இந்தியாவுல உள்ள மொபைல் பயனாளர்களுக்கு, தேவையற்ற அழைப்புகள் மற்றும் ஏமாற்று SMS-களில் இருந்து வெளிவர ஓர் நம்பகமான தீர்வா அமையும். மேலும் தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் SMS-கள கட்டுப்படுத்துவதன் மூலம் , மக்களின் தினசரி வாழ்க்கைய சீர்மிகு, அமைதியானதாகவும் மாற்றும். அது மட்டுமில்லாம , தகவல் பாதுகாப்பு, நிதி ஒழுங்கு மற்றும் தொழில்நுட்ப நம்பிக்கையையும் இது அதிகரிக்கும்.