விபத்தில் சிக்கிய இளைஞர்...யாரும் எதிர்பாரா நேரத்தில் வந்து உதவிய துணை மேயர்

Update: 2025-06-12 04:55 GMT

சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை துணை மேயர் மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்தார். சென்னை தீவுதிடலிலிருந்து அண்ணா சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த இளைஞர் அண்ணா சாலை பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பேரிகாடில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். ரத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்த இளைஞரை அந்த சாலை வழியாக சென்ற துணை மேயர் மகேஷ் குமார் உடனடியாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்