Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26.05.2025)| 9 AM Headlines | Thanthi TV

Update: 2025-05-26 04:15 GMT
  • கேரளா மாநிலம் கொச்சியில் கப்பலோடு கடலில் மூழ்கிய கண்டெய்னர்களில் ஒன்று கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியது...
  • கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான மீட்புப்பணிக்காக நெல்லையில் இருந்து கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை...
  • நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு...
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
  • நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை...
  • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வெளுத்து வாங்கும் மழை...
  • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்...
  • தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...
  • ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு...
  • தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க தடை.......
  • டாஸ்மாக் வழக்கு விசாரணை காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
  • வருங்காலத்தில் பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
  • சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
  • புதுச்சேரியில் வெளிநாட்டு அழகியிடம் ஆறரை லட்சம் ரூபாயை இழந்த தனியார் நிறுவன அதிகாரி......
  • ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
  • பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில், போதை விருந்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் உள்பட 31 பேர் கைது...
  • பீகார் மாநில முன்னாள் அமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கம்...
  • இந்தியாவில் இரண்டு வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு....
  • காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு.....
  • ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? என்பது குறித்து மனம் திறந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி...
  • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய கிளாஸன்
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்