Today Headlines |காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23.05.2025)| 9 AM Headlines | ThanthiTV
- வரும் ஜூன் 2ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்...
- கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...
- பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்..
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் இந்தியா.....
- வங்கக் கடலில் வரும் 27ஆம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி......
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால், செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை...
- கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை டீன் லியோ டேவிட் விளக்கம்...
- அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த உடனே குழந்தையை கழிவறை கோப்பையில் திணித்து கொடூரமாக கொன்ற தாய்...
- திருப்பதி திருமலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் நமாஸ் செய்வது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சை..
- ஆந்திராவில் மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன், திடீரென வெடித்ததால் பரபரப்பு...
- நடிகர் ரவி மோகன் விவகாரத்தில், சமூக வலைதளங்களில் தன் மீது வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள் என கெனிஷா ஆவேசம்...
- அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி...
- மொரீசியஸ் வசம் சாகோஸ் தீவு செல்லும் இங்கிலாந்தின் உடன்படிக்கைக்கு இந்தியா வரவேற்பு...
- கோலிவுட்டில் இன்று ஒரே நாளில் விஜய் சேதுபதியின் ஏஸ், யோகி பாபுவின் ஸ்கூல் உட்பட 7 திரைப்படங்கள் ரிலீஸ்...
- ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் மோதல்...