Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2025)| 9 AM Headlines | Thanthi TV
சென்னையில் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...
நாடு முழுவதும் நாளை அனைத்து மாநில அரசுகளும் போர்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு...
போர்க்காலங்களில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஒத்திகை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்க வாய்ப்பு...
கடலுக்கு அடியில் போர் திறனை வலுப்படுத்தும் வகையில் DRDO - இந்திய கடற்படை இணைந்து நடத்திய சோதனை வெற்றி...
பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்னியோ குட்டரஸ் கடும் கண்டனம்....
வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்த நிரந்தர உறுப்பினர்களுக்கான உதவித்தொகை, 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்...
திமுக ஆட்சியில் வணிகர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பாதுகாப்பு இல்லை என ஈபிஎஸ் விமர்சனம்..
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?...
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்...
சென்னை வடபழனியில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை திருடிய 4 பேர் கொண்ட கும்பல், சிவகாசி அருகே கைது...
வைரம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும், விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை...
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு...
வடகாடு பகுதியில், ஏற்பட்ட மோதல் கோயில் திருவிழாவால் நிகழ்ந்தது அல்ல என போலீசார் விளக்கம்...
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பயணித்த குண்டு துளைக்காத கார் திடீரென பழுதானது ஏன் என தமிழக காவல்துறை அறிக்கை...
பாஜக கூட்டணிக்கு வருமாறு மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தன்னை அழைத்ததாக திருமாவளவன் பரபரப்பு பேச்சு....
ஈரோடு இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்...
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் காலமானார்...
நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...
நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...
பாமக முன்னாள் எம்எல்ஏ காசாம்பு பூமாலை தாக்கியதாக, சொந்த மகளே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் வீடியோவுடன் புகார் அளித்ததால் பரபரப்பு...
கரூர் மாவட்டம் நெரூரில், எச்சில் இலைகள் மீது உருளும் சம்பிரதாயத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...
பொள்ளாச்சி அருகே செயின் பறிக்க திருட்டு பைக்கில் சென்ற சிறுவன் உட்பட 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்...
ஈரோட்டில், 22 வயது இளைஞர், தன்னைவிட 16 வயது மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 மாதத்திலேயே கொலை செய்ததால் அதிர்ச்சி...