அரிசியில் விஷம் வைத்து கொடுத்ததில் 20 கோழிகள் பலி- போலீஸ் விசாரணை

Update: 2025-07-22 12:58 GMT

புதுச்சேரியில் கோழிகளுக்கு அரிசியில் விஷம் வைத்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வாழ்முனி. இந்த நிலையில் இவர் வளர்த்த 20 கோழிகள் ஒரே நாளில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாழ்முனி அளித்த புகாரில் காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது கோழிகளுக்கு யாரோ அரிசியில் விஷம் வைத்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்