இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-05-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- ஐ.பி.எல் தொடரில் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூரு அணி வெற்றி....
- அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி......
- நான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி பேசியது, முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.....
- நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தாம் விரும்பியதாக ராமதாஸ் விளக்கம்...
- பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களை மாற்ற கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு என தகவல்...
- சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் நாளை பா.ம.க நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்...
- ராமதாஸ்-அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் பதவியில் இருந்து விலகல்...
- சென்னை ராயப்பேட்டையில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்....
- 2026 தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் த.வெ.க தீவிரம்...
- பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.....
- நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது...
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..
- தென்காசியில் வீசிய பலத்த காற்றால், வேரோடு சாய்ந்து விழுந்த மரம்...
- சென்னை விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்...
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம் தரமற்ற முறையில் உள்ளதாக புகார்...
- சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து..
- சென்னை நெற்குன்றத்தில், அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து...
- கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மே 31, ஜூன் 2ஆம் தேதிகளில், 17 புறநகர் ரயில் சேவை ரத்து...
- மயிலாடுதுறை முதல் காரைக்குடி இடையேயான பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க கோரி விண்ணப்பம்...
- சென்னையில் அனுமதியின்றி செயல்பட்ட உடல் எடை குறைப்பு மையத்தில் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு...
- திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது குற்றச்சாட்டு...
- கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் 'தக் லைஃப்' வெளியாகாது என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் அறிவிப்பு...
- கமல்ஹாசன் கூறியதை நானும் ஏற்க மாட்டேன் என தக் லைஃப் பட கர்நாடக விநியோகஸ்தர் வெங்கடேஷ் கருத்து..
- கேரள மாநிலம் கொச்சி அருகே கப்பல் கவிழ்ந்த சம்பவம் மாநில பேரிடராக அறிவிப்பு...
- கேரள கப்பல் விபத்தில் கரைஒதுங்கிய கொள்கலனை அகற்றும் போது தீ விபத்து...