'பைக்கை ஒழுங்கா நிறுத்தலாமே..' தட்டிக் கேட்ட தியேட்டர் ஊழியர்களை தாக்கிய கும்பல் - வெளியான சிசிடிவி காட்சி
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், சினிமா திரையரங்க வளாகத்தில், ஊழியர்களுக்கு ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே உள்ள சினிமா திரையரங்கில், திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள், இருசக்கர வாகனத்தை தாறுமாறாக நிறுத்தியுள்ளனர்.
இதனை சினிமா திரையரங்கு ஊழியர் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
படம் பார்க்க வந்த ரசிகர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
அதில் ஒருவர் தனது நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திரையரங்குக்கு வரவழைத்து உள்ளார்.
பின்னர் அங்கு வந்த கும்பல், திரையரங்கு ஊழியர்களை தாக்கியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.