பறவைகளுக்காக பண்டிகைகளை கொண்டாடாத கிராமம் - தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து வரும் பொதுமக்கள்

Update: 2022-10-23 15:54 GMT

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் வாழ்வதற்காக தங்களது பண்டிகைகளையே கொண்டாடாமல் தியாக மனப்பான்மையோடு பொதுமக்கள் வாழ்ந்துவருதை பிற பகுதி மக்கள் கண்டு வியப்படைந்து வருகின்றனர். கூந்தன்குளம் கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் இந்த கிராமத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து பலவகையான பறவை இனங்கள் கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள குளங்கள் மற்றும் தெருக்களில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன. இது காலங்காலமாக இங்கு நடந்து வருகிறது. இதனால் எந்த ஒரு திருவிழா நடந்தாலும், பறவைகளை அச்சுறுத்தாத வகையில் மின்விளக்குகள் வைத்து மட்டும் அக்கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை பொதுவாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையை இந்த ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருவது மக்களை வியக்க செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்