காண்போரை கவர்ந்த கிராமிய கலைநிகழ்ச்சிகள்..மெய்நிகர் ராட்டினத்தில் ஏறி அமைச்சர் உற்சாகம்
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் கலை சங்கமம் விழா, விமரிசையாக நடைபெற்றது. இதனை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொடங்கி வைத்தார். நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 52 நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் இடம்பெற்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் காண்போரை கவர்ந்தன. இந்த விழாவில் அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், மண்பானை செய்து அசத்தினார். தொடர்ந்து பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிட்ட அவர், மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்டினத்தில் ஏறி, உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அவருடன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.