நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் இரட்டை கோபுரங்கள்

Update: 2022-08-28 03:03 GMT

நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் இரட்டை கோபுரங்கள்


உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 அடுக்குகளை கொண்ட இரட்டை கோபுரம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தகர்க்கப்பட உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்ட‌டம் முழுவதும் 3 ஆயிரத்து 700 கிலோ வெடி பொருட்கள் வைக்கப்பட்ட பிறகு, அங்கு இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் 12 மணிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கட்ட‌டங்கள் தகர்க்கப்படும் போது அதிகப்படியான தூசு பறக்கும் என்பதால், 2 கிலோ மீட்டர் சுற்றளவில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத்துறையும், மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்