ஆபாச வழக்கில் சிக்கினாலும் உயரும் டிரம்ப்பின் செல்வாக்கு - கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

Update: 2023-04-05 03:12 GMT

ஆபாச வழக்கில் சிக்கினாலும், அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு உயர்ந்து வருவது, ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

  • அமெரிக்காவை பொருத்தவரை, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, கட்சிக்குள் நடக்கும் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.
  • இந்நிலையில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி, அதாவது டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவான நாள் முதல் திங்கட்கிழமை வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவில், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  • இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப்பிற்கு ஆதரவாக 44 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
  • இந்நிலையில், தற்போது டிரம்ப் மீதான வழக்கை பெரும்பாலான அமெரிக்கர்கள், அரசியல் தூண்டுதலாக பார்ப்பது தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்