இன்றைய தலைப்பு செய்திகள் (22-06-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-22 15:44 GMT

பீகாரில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு...

தனி விமானம் மூலம் இன்று பாட்னா சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக இன்று மனு தாக்கல்...

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இன்று அனுமதி...

தமிழக அரசு விரைவில் பணியை தொடங்கவுள்ளதாக தகவல்...

வள்ளலார் காட்டிய நெறிகளை சிதைப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி மீது அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று குற்றச்சாட்டு...

சனாதன போர்வைக்குள் சன்மார்க்க நெறியைப் புகுத்த முயற்சிப்பதாகவும் கண்டனம்...

மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம்...

கலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் நாளை மறுதினம் அனைத்து கட்சி கூட்டம்...

தாமதமான நடவடிக்கை என ராகுல்காந்தி விமர்சனம்....

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இன்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தை...

இந்தியாவின் சிறப்பு மிக்க பத்து பொருட்களை பரிசளித்தார் பிரதமர்...

Tags:    

மேலும் செய்திகள்