காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரிட்ட திடீர் தீ விபத்தால் கடும் புகை மூட்டம்.... அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 4 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்.....
- கோழிக்கோடு மருத்துவமனையில் கடுமையான புகைமூட்டத்தால் நோயாளிகள், உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்.... உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கும் ஓடிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பு....
- தீ விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு மருத்துவமனையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.... பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை..... விசாரணைக்கு உத்தரவிட்டார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...
- திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..... சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை என தகவல்......
- அதிமுக கூட்டணியில் பாஜகவை அமைதியாக இணைத்தது போல் பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு... பொதுவெளியில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் கூறக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்...
- பாஜகவுடனான கூட்டணியை வரவேற்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்... ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க வியூகம் வகுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு எனவும் தீர்மானம்.....
- சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா... காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்...
- தமிழகத்தில் சென்னை, மதுரை திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சதம் அடித்த வெயில்... 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் சுட்டெரித்ததால் பொதுமக்கள் கடும் அவதி....
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக வெளுத்து வாங்கிய கோடை மழை... வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி...
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை... சங்கரநாராயணசாமி கோயிலுக்குள் மழை நீர் புகுந்ததால், நீரில் நின்ற படி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்...