Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-12-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-12-2022) | Morning Headlines | Thanthi TV;

Update: 2022-12-17 00:54 GMT

அரசின் திட்ட சலுகைகளை பெற ஆதார் எண் அவசியம்... அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது, தமிழக அரசு...

கோவை அன்னூரில் அமையும் தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு... பாஜக நடத்திய போராட்டத்தின் விளைவே இந்த அறிவிப்பு என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...

அன்னூரில் தொழிற் பூங்கா அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்... காற்று, நீர் மாசு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு...

சென்னை அருகே ஈசிஆர் சாலையில் இருந்து ஜிஎஸ்டி சாலை வரை 6 வழி வழிப்பாதை அமைக்க திட்டம்... வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம்...

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்... கடந்த வாரம் மாண்டஸ் புயலுக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டுவதாக அறிவிப்பு...

என்னை வாழ வைத்த தெய்வம், எம்ஜிஆர்.. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு...

தனக்கு அமைச்சர் பொறுப்பு கிடைத்ததற்கு, அமைச்சர் நாசர் தான் காரணம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு....



Tags:    

மேலும் செய்திகள்