Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-10-2022) | Morning Headlines | Thanthi TV;
36 செயற்கைக் கோள்களுடன், எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது... ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நள்ளிரவு 12.07 மணிக்கு நெருப்பை கக்கியபடி சீறிப்பாந்தது...
36 செயற்கைக் கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது... தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விட்டதாக இஸ்ரோ சேர்மன் சோம்நாத் பெருமிதம்...
நிலவை ஆராயும் சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஏவப்படும்... இஸ்ரோ சேர்மன் சோம்நாத் விருப்பம்...
சூரியன் உதயமாவதை போல ராக்கெட் சீறிப்பாய்ந்தது... இஸ்ரோவின் சாதனைகளில் மைல்கல் என பொதுமக்கள் கருத்து...
தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி விற்பனை... ஆடை, பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்...
சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் திரும்பிய திசை எங்கும் மக்கள் கூட்டம்... ஆடை, இனிப்பு, பட்டாசு வாங்க குவிந்தனர்... திக்குமுக்காடிய சாலைகள்...
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவினர், மோப்பநாயுடன் தீவிர சோதனை... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை...
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்... சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...