கடைக்குள் திடீரென உடும்பு புகுந்ததால் பரபரப்பு - ஒருமணி நேரம் போராடி உடும்பை மீட்ட தீயணைப்புத்துறை
கிருஷ்ணகிரி அருகே கடைக்குள் திடீரென உடும்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல்ஸ் கடையில், திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. உடும்பை கண்ட கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, உடும்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.