Safety உடை இல்லாமல் கழிவுநீர் அடைப்பை அகற்றிய பணியாளர்கள் - கவுன்சிலர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - கதிகலங்கிய மது​ரை

Update: 2023-06-22 03:00 GMT

மதுரை திருநகரில் பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் அடைப்பை தூய்மைப் பணியாளர்கள் அகற்றுவதாக, அப்பகுதியின் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்வேதா சக்தி வீடியோ வெளியிட்டுள்ளார். திருநகர் அருகே உள்ள சொர்ணம் காலனியில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு சாலயில் ஓடியதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் அடைப்பை சரி செய்ததாகவும், அவர்களுக்கு போதுமான உபகரணங்கள் வாங்க நிதி அளிக்குமாறும் மது​ரை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்