10 நாட்களாக ஆட்டம் காட்டிய காட்டு யானை.. இருப்பிடம் அறிந்து விரைந்த அதிகாரிகள்
10 நாட்களாக ஆட்டம் காட்டிய காட்டு யானை.. இருப்பிடம் அறிந்து விரைந்த அதிகாரிகள்
கோவையில் கடந்த 10 நாட்களாக தேடப்பட்டு வந்த காட்டு யானை பனப்பள்ளி அருகே இருப்பது தெரிய வந்ததை அடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை காயத்துடன் இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், பனப்பள்ளி அருகே அந்த யானை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.