நடுவானில் மயங்கிய விமானி.. பதறிப்போன பயணிகள்.. ஆனாலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. அது எப்படி?..

Update: 2023-03-25 15:39 GMT

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, விமானத்தில் பயணித்த மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த விமானியின் உதவியால் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்து புறப்பட்டு ஓஹியோவின் கொலம்பஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் மற்றொரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ஒருவர் பயணியாக பயணித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் உதவிக்கரம் நீட்டினார். அவரது உதவியால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்