கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் ஷிஹாப் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடினார். இந்த வழக்கில், பழக்கடைக்காரர் தனக்கு புகார் இல்லை என கூறியதையடுத்து, ஷிஹாப் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், திருட்டு சம்பவம் காவல்துறைக்கு அவமரியாதை ஏற்படுத்தியதோடு துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானதால், அவரை பணியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.