"அள்ளிக்கொடுத்த வரதட்சணை பத்தாது" -கொடூர கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் -நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-09-13 16:46 GMT

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 100 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், சென்னைக்கு மனைவியை அழைத்து வந்த குமாரசாமி, கூடுதலாக நகையும், பணமும் கேட்டு அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த லட்சுமி பிரசன்னா, 2013-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், லட்சுமி பிரசன்னாவை குமாரசாமி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதை உறுதி செய்த நீதிபதி முகமது பரூக், குமாரசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்