சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய பயங்கரவாதி - அப்படியே தூக்கிய போலீஸ் | Terrorist | Chennai airport

Update: 2023-07-25 07:40 GMT

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பயங்கரவாதி தவ்பிக் என்பவரால் கடத்தப்பட்டார். தேசிய புலனாய்வு துறை அதிகாரி போல் நடித்து, தொழிலதிபரை கடத்திய தவ்பிக், அவரிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் பணம் பறித்துவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தவ்பிக்கின் மனைவி மற்றும் அவரின் முக்கிய கூட்டாளியான கட்டை காதர் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த தவ்பிக்கை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைத்து வடக்கு கடற்கரை பிரிவு போலீசார் கைது செய்தனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் என தொடர்ந்து பல நாடுகளில் தலைமறைவாக இருந்த தவ்பிக், நாம் மனிதர் கட்சி மற்றும் இறைவன் ஒருவனே என்ற பெயரில் இஸ்லாமிய தற்காப்பு படை போன்ற அமைப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் சுமார் 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் தவ்பிக் மீது நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்