இளம்பெண்களின் மலை சாகசப் பயணம்.. 7 நாட்களில் 1,600 கி.மீ... - திகைத்து போன சென்னை ரைடர்ஸ்
நாமக்கல்லில் இளம்பெண்கள் இருவர், மலைத்தலங்களுக்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினர். நாமக்கல் கங்கா நகரை சேர்ந்த சித்திக் பாட்ஷா - பானு தம்பதியினரின் மகள் ஆயிஷா மற்றும் பெரம்பலூரை சேர்ந்த அபர்னா ஆகியோர், 'பெண்கள் அனைவருக்கும் சமம்' என்பதை வலியுறுத்தி, மலைத்தலங்களுக்கு 7 நாட்கள், மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினர். ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லும் இவர்கள், முதலில் கொல்லிமலைக்கும், பின்னர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்பட 15 மலைத்தலங்களுக்கும் செல்கின்றனர். சுமார் 1,600 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ள இருவரையும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.