பைக் தகராறில் இளைஞரின் மண்டை உடைப்பு... போலீசார் அட்ராசிட்டி..! சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-07-13 02:55 GMT

பல்லாவரம் அருகே குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன். புகைப்பட கலைஞரான இவர், அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்திருந்த நிலையில், சம்பவத்தன்று இரு காவலர்கள் கடை முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், இட நெருக்கடியால் காவலர்களிடம் வாகனத்தை எடுக்ககோரி இளைஞர் வற்புறுத்தியுள்ளார். அப்போது, காவலர்கள் வாகனத்தை எடுக்க மறுத்ததாகவும், அதிகாரத் தொனியில் இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த இளைஞர், ரத்தம் சொட்டிய நிலையிலே காவல்நிலையம் வந்து புகாரளித்த நிலையில், இளைஞர் மது அருந்தியிருப்பதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால் பரபரப்பானது.

Tags:    

மேலும் செய்திகள்