அம்மன் கோயில் இடத்தில் கட்டப்பட்ட MLA ஆபீஸ்... திடீரென சல்லி சல்லியாய் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி ...வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2023-03-22 13:30 GMT

புதுச்சேரியில் அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த எம்.எல்.ஏ அலுவலக கட்டுமான பணியின் போது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சண்முகாபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கதிர்காமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், கீழே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்