இறந்த நண்பனின் நினைவு நாள்..சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2023-05-07 08:49 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில் கேசவன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்.விபத்தில் இறந்த கேசவனின் மனைவி வித்யா, வருமானமின்றி தவித்து வந்த நிலையில் இரண்டு குழந்தைகளின் பெயரில் சக நண்பர்கள், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினர். அது மட்டுமல்லாமல் நண்பனின் இறந்த நாளில் மெழுகுவத்தி ஏற்றி சுமார் 50 பேர் ஒன்று கூடி சக நண்பர்கள் ரத்த தானம் செய்து கேசவனின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்