ஆற்றுகால் கோயிலில் நாளை பொங்கல் திருவிழா - பொங்கலிட அடுப்பு அமைக்க ஆயத்தமாகும் பெண்கள்
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறவுள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, பெண்கள் அடுப்பு அமைத்து இடம் பிடிக்க தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுகால் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பல லட்ச பெண்கள் ஒரே இடத்தில் கூடுவதால், இந்நிகழ்வு இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தது. இந்நிலையில், நாளைய தினம் நடைபெறவுள்ள பொங்கல் திருவிழாவிற்கு, இன்று முதல் பெண்கள் அடுப்பு அமைத்து இடம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.