30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ மட்டுமே மிச்சம்! - "எலிதான் காரணம்..." - நீதிமன்றத்தில் போலீஸ்

Update: 2023-01-08 17:24 GMT

30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ மட்டுமே மிச்சம்! - "எலிதான் காரணம்..." - நீதிமன்றத்தில் போலீஸ்


சென்னையில், பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் கஞ்சாவை முழுமையாக சமர்ப்பிக்கத் தவறியதால், வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பெண்களை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு, கஞ்சா கடத்த முயன்றதாக கல்பனா, குமாரி, நாகமணி ஆகிய மூவரையும் சிஎம்பிடி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படும் 30 கிலோ கஞ்சாவில், 11 கிலோவை மட்டுமே காவல் துறையினர் சமர்ப்பித்தனர். காவல் நிலைய கட்டடம் பழுதடைந்து இருந்ததாலும், எலிகள் கடித்து சேதப்படுத்தியதாலும் எடை குறைந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாக கூறி, மூன்று பெண்களையும் விடுதலை செய்து நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்