சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி

Update: 2023-04-06 13:12 GMT

தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவராஜு நாகார்ஜுனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் கடந்த மாதம் 23ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் பேசிய நீதிபதி நாகார்ஜுன், நாட்டிலேயே பழமையான சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாகக் குறிப்பிட்டார். இவருடன் சேர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்