புதிதாக திறக்கப்பட்ட கடையின் கில்லாடி மார்க்கெட்டிங் ஐடியா..!! கடை முன் திரண்ட மக்கள் கூட்டம்
- நெல்லையில் புதிதாக திறக்கப்பட உள்ள வீட்டு உபயோகப் பொருள் கடையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் முதல் 300 பேருக்கு பரிசு என்ற அறிவிப்பால் கடைமுன் கூட்டம் அலைமோதியது...
- வள்ளியூரில் தனியார் நிறுவனத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருள் கடை ஒன்று நாளை திறக்கப்பட உள்ளது. கடை நிர்வாகம் கடை சார்பில் விளம்பரத்துடன் கூடிய ஓவியம் வரையும் போட்டி நடத்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
- ஓவியங்களுடன் முதலில் வரும் 300 பேருக்கு சிறப்பு பரிசு என்ற அறிவிப்பால் கடை ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கையில் ஓவியத்துடன் குழந்தைகள் மற்றும் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.