"மோடி கிச்சன் கூடங்கள்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு" - பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுக்கோள்
ஆங்காங்கே மோடி கிச்சன் என்ற உணவு தயாரிக்கும் கூடங்களை அமைத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று, கட்சியினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளர்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எவர் ஒருவரும் பசியால் வாடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
அந்தந்த பகுதிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, மருத்துவ முகாம்கள் அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.