ஆசை ஆசையாக வாங்கிய குல்பி ஐஸ்... சாப்பிட்ட உடனே நேர்ந்த பயங்கரம் - 65 குழந்தைகளின் நிலை..?

Update: 2023-06-11 01:55 GMT

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில், குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. குல்ஃபி ஐஸ் விற்பனையாளரிடம் குல்ஃபிகளை வாங்கிச் சென்ற குழந்தைகள், அதை சாப்பிட்டவுடன் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, 50 குழந்தைகள் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்