விருத்தாச்சலம் அருகே டிராக்டர் மூலம் உழவுப்பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார். பூதம்பூரில் ராஜ்குமார் என்பவர், நிலத்தில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை மேற்கொண்டார். அப்போது, ஏர் கலப்பையில் சிக்கிக் கொண்ட மின் கம்பியை இறங்கி எடுத்தபோது, மின்சாரம் தாக்கி ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மின்சார துறையினர், ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.