இன்னும் டிசம்பர் முடியல.. இனிமேல்தான் இருக்கு ஆட்டம்! "உருவாகிறதா புதிய புயல்?"

Update: 2022-12-23 02:33 GMT

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

அது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகையில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும்.

அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 24ம் தேதி, தமிழக கடலோரம், உள் தமிழகத்திலும்,

வரும் 25ம் தேதி, தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்திலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 26ம் தேதி வரை தமிழக கடலோரம், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவிலும்,

வரும் 25ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனாறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்