- போடிநாயக்கனூரில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த வெங்கடேசன் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மனைவி சவுமியா, தனது மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார்.
- இந்த நிலையில், சவுமியா தனது மாமனார் சுப்பையன் மீது மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
- அது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், சவுமியா தனது உறவினர்களுடன் சேர்ந்து மீண்டும் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சுப்பையனை போலீசார் கைது செய்து சிறையின் அடைந்தனர்.
- மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி மற்றும் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.