முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், சௌபாக்கியா தம்பதியினரின் மூத்த மகள் டானியா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மகளின் சிகிச்சைக்கு உதவிடுமாறு, முதலமைச்சருக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இது குறித்த அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், சிகிச்சைக்கு உத்தரவிட்ட நிலையில், சிறுமி டானியாவுக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர், சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, இனி எதை பற்றியும் கவலை வேண்டாம், விரைவில் பள்ளிக்கு செல்லலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என தைரியம் ஊட்டியுள்ளார்.