மழையோடு பனியையும் சேர்த்து அழைத்து வந்த மாண்டஸ் புயல் - திணறும் ஊட்டி மக்கள்

Update: 2022-12-09 10:35 GMT

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் உதகையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள். கடும் பனிமூட்த்துடன் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பலேவேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் உதகையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

பனி மூட்டத்தால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டவாறு இயக்கபட்டு வருகின்றன. இதனிடையே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணபடுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்