"பாதசாரிகளுக்கு இடையூறாக கடைகள்" - "போட்டோ அனுப்பினால் போதும்" - சென்னை போலீசார் அதிரடி அறிவிப்பு

Update: 2023-03-20 04:10 GMT
  • சென்னை மாநகர சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்லவும், பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும், சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அந்த வகையில், சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தாலோ, வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலோ புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்