பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்
சென்னை திருவொற்றியூர் வடக்கு மாவட்ட வீதியில் வசிப்பவர் ரவி. இவர் பாஜக மண்டல் தலைவராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமைடைந்தது. ரவி அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.