விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய தமிழக ராணுவ வீரருக்கு நேர்ந்த விபரீதம் | Army | Kanniyakumari

Update: 2022-11-07 16:20 GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பியபோது, கன்னியாகுமரி மாவட்ட ராணுவ வீரர் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியை சேர்ந்த முருகன்- ராசி தம்பதிக்கு, விஷ்ணு, விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராணுவப் பயிற்சி முடித்து, பஞ்சாப் ரெஜிமென்டில் விஜய் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பிய விஜய், சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ரவாடி பகுதியில், ரயிலின் படிக்கட்டில் நின்றிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனிடையே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்