உலக சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 11 மாத குழந்தை

Update: 2022-10-22 06:42 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு தேனாம்பாறை பகுதியில், 11 மாத குழந்தை ஒன்று, 233 பொருட்களின் பெயரை சொன்னால் உடனே கையால் அடையாளம் காட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெறில் ஹெர்மன் - பியான்ஷா தம்பதியின் ஆண் குழந்தை அற்றி ஹெர்மன், 11வது மாதத்தில் வீட்டில் பயன்படுத்தும் 233 பொருட்களின் பெயரை பெற்றோர்கள் கூற அவற்றை சரியாக இனம்கண்டு கையில் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளான். இதனை பெற்றோர் வீடியோவாக எடுத்து அனுப்ப, உலக சாதனை புத்தகத்தில் குழந்தையின் பெயர் இடம்பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்